Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூப்படையும் மக்கள் தொகையைச் சமாளிக்கச் சுகாதார அமைச்சரின் சில பரிந்துரைகள்

வாசிப்புநேரம் -
மூப்படையும் மக்கள்தொகை பல நாடுகளைப் பாதித்துவருவதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) கூறியிருக்கிறார்.

'UN Decade of Healthy Ageing' நிகழ்ச்சியில் நேற்று (23 மே) அவர் பேசினார்.

கடந்த சுமார் 50 ஆண்டுகளில் உலகளாவிய இடைநிலை வயது சுமார் 20லிருந்து ஏறக்குறைய 30க்கு உயர்ந்துள்ளதாகத் திரு ஓங் தெரிவித்தார்.

முதன்முறையாக 2019ஆம் ஆண்டில் 64 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 5 வயதுக்குக் குறைந்தவர்களுடன் ஒப்புநோக்கக் கூடுதலாய் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

மற்ற வயதினருடன் ஒப்பிடுகையில் 64 வயதுக்கும் அதிகமானவர்களின் எண்ணிக்கை வெகுவிரைவாய்க் கூடிவருவதாகவும் திரு. ஓங் தெரிவித்தார்.

மூப்படையும் மக்கள்தொகையைச் சமாளிக்க அவர் சில பரிந்துரைகளை முன்வைத்தார்.

மூத்தோருக்கு ஏற்றார் போல வாழும் சூழலை ஏற்படுத்துவது முக்கியம்.

மூத்தோரை உள்ளடக்கிய ஊழியரணி இருப்பதோடு நீண்ட ஆயுட்காலத்துக்கு ஏற்ப ஓய்வு வயதை அதிகரிப்பதும் அவசியம்.

ஓய்வுக்காலக் கணக்கைப் பலப்படுத்துவது முக்கியம் என்றும் சுகாதாரக் கட்டமைப்புகளில் சீர்திருத்தம் கொண்டுவருவது
அவசியம் என்றும் திரு. ஓங் சொன்னார்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்