Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விவசாயத் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றம் - புதிய இடைநிலை வாழ்க்கைத் தொழில் மாற்றத் திட்டம்!

வாசிப்புநேரம் -
விவசாயத் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றம் - புதிய இடைநிலை வாழ்க்கைத் தொழில் மாற்றத் திட்டம்!

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: CNA

விவசாயத் தொழில்நுட்பத் துறைக்கு மாற உதவும் புதிய இடைநிலை வாழ்க்கைத் தொழில் மாற்றத் திட்டத்தின் மூலம் 100 பேர் வரை பயனடைய முடியும். 

தற்போது அந்தத் துறையில் சுமார் 2,000 பேர் பணியாற்றுகின்றனர். 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 4,700 புதிய வாய்ப்புகள் அந்தத் துறையில் உருவாகும்.

அவற்றுள், சுமார் 70 விழுக்காட்டு வேலைகள் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கு உரியவையாக இருக்கும்.  

பண்ணை மேலாளர்கள், நிர்வாகிகள், பயிர் விஞ்ஞானிகள் போன்ற பணிகளுக்கான பயிற்சிகள் திட்டத்தின் மூலம் வழங்கப்படும். 

தகுதி, வேலை அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் குறைந்தபட்சம் 2,000 வெள்ளி சம்பளம் பெறலாம். 

திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுவோருக்கு வேலை வழங்க 15 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. 

2030க்குள் சத்துணவுத் தேவையில் 30 விழுக்காட்டை உள்நாட்டிலேயே தயாரிக்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய திட்டம் அமைந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்