அனைவரும் AI பற்றிப் புரிந்துவைத்திருக்க முயற்சி
தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டங்கள் சேர்க்கப்படவிருக்கின்றன.
மாணவர்கள் அதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் புதிய திறன்களை உருவாக்கவும் பயிற்சிகள் வழங்கப்படும்.
உயர்கல்வி நிலையங்களில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகச் செயற்கை நுண்ணறிவு பற்றிய புரிதலை மாணவர்களுக்கு வழங்கக் கல்வி அமைச்சு விரும்புகிறது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் ஒருவர் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார்?
எந்தெந்தப் பயிற்சிகள் தேவைப்படுகின்றன என்பதைச் சொல்ல
MySkillsFuture தளத்தில் ஓர் அம்சம் சேர்க்கப்படும்.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் குறிப்பிட்ட செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகளுக்கு ஓராண்டுகாலம் சலுகைக் கட்டணத்தில் செல்லலாம்.