"Physiotherapy சிகிச்சையில் AI பெரிய பங்கு வகிக்கும்"
(படம்: unsplash)
This audio is generated by an AI tool.
சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்சாம் (Rahayu Mahzam) Physiotherapy எனும் உடல் இயக்கச் சிகிச்சையில் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் பெரிய பங்கு வகிக்கும் என்று கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரின் மக்கள் தொகை வேகமாக முதுமை அடைந்து வருகிறது.
சிகிச்சைக்கான தேவைகளும் அதிகரித்து வருகின்றன.
அதனால், நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லாமல், வீட்டிற்கு அருகிலேயே சிகிச்சை பெறுவது முக்கியம் என்று திருவாட்டி ரஹாயு கூறினார்.
சிங்கப்பூர் அனைத்துலக உடல் இயக்கச் சிகிச்சை மாநாட்டில் அவர் பேசினார்.
சிங்கப்பூரில் உடல் இயக்கச் சிகிச்சை, சமூகப் பராமரிப்பு நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
சில சமூக மருத்துவமனைகள், நோயாளிகளின் முன்னேற்றத்ததைத் தொலைவிலிருந்து கண்காணிக்க AI கருவிகளைப் பயன்படுத்துகின்றன.
உடல் இயக்கச் சிகிச்சை நிபுணர்களுக்கான தொழில் முன்னேற்ற வாய்ப்புகளையும் சுகாதார அமைச்சு உருவாக்கி வருகிறது என்று திருவாட்டி ரஹாயு சொன்னார்.