"செயற்கை நுண்ணறிவைக் கையாள புதிய அணுகுமுறை தேவை"

Unsplash/Markus Spiske
செயற்கை நுண்ணறிவை நெறிப்படுத்துவதில் வழக்கத்துக்கு அப்பாற்பட்ட புதிய அணுகுமுறை தேவை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவால் கிடைக்கும் அனுகூலங்கள் வியக்கத்தக்கவையாக இருக்கும் என்றார் அவர்.
அந்த நவீனத் தொழில்நுட்பத்தில் ஏராளமான ஆபத்துகளும் இருப்பதால் அதைப் பழைய வழிகளில் நெறிப்படுத்துவது போதாது என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.
சாதகமாகவும் பாதகமாகவும் ஏற்படக்கூடிய மிதமிஞ்சிய தாக்கங்களை எதிர்கொள்ள உலகம் எந்த அளவுக்குத் தயார்நிலையில் உள்ளது என்று அவர் வினா எழுப்பினார்.
அதற்கு வட்டார அளவில் மட்டுமின்றி பன்முனை ஒத்துழைப்பும் உலகளாவிய அணுகுமுறையும் அவசியம் என்று நம்புவதாக அவர் சொன்னார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் டாக்டர் பாலகிருஷ்ணன் பேசினார்.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில், வெளிப்படைத்தன்மையும் தனிநபர் தகவல் பாதுகாப்பும் இருப்பதை உறுதிசெய்யச் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்றார் அவர்.