Skip to main content
AI
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

AI - எளிமையாக, நன்மைக்காகப் பயன்படுத்துவது எப்படி?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் AI for Good Festival எனும் விழா தொடங்கியிருக்கிறது.

அதன் நோக்கம் என்ன?

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை எளிமைப்படுத்துவது.

செயற்கை நுண்ணறிவை நன்மை பயக்கும் விதத்தில் பயன்படுத்த இளையர்களை ஊக்குவிப்பது.

AI Singapore அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் விழாவில் பயிலரங்குகள், கண்காட்சிகள் எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.

5,000க்கும் அதிகமான இளையர்களைச் சென்றடைவது திட்டம்.

பார்வைத்திறன் குறைந்தோர் பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கு உதவியாக Hear2Go எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ரிப்பப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களின் முயற்சி இது.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் செயலி பேருந்து எண்ணை உரக்கச் சொல்லும்.

வெவ்வேறு வானிலைச் சூழல்களில் செயலி இன்னும் சிறப்பாகச் செயல்படுவதில் கவனம் செலுத்தவிருப்பதாய் மாணவர்கள் கூறினர்.

ரிப்பப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு விழாவையொட்டி அதுபோன்ற பல மாணவப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

செயற்கை நுண்ணறிவில் கைதேர்ந்தவர்கள் சமூகச் சவால்களுக்குத் தீர்வு காண ஊக்குவிக்கப்படுகின்றனர்.

திறமையை மேலும் மெருகேற்ற நினைக்கும் இளையர்களுக்கு இலவசப் பயிலரங்குகள் வழங்கப்படுகின்றன.

அடுத்த மாதம் ITE College Eastஇல் அந்த விழா நடத்தப்படும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்