விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணி எப்படிப்பட்டது?
வாசிப்புநேரம் -

(படம்:Jeremy Long)
சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம் 2030களின் நடுப்பகுதியில் திறக்கப்படவிருக்கிறது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கான தேவை 40% கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணிதான் என்ன? அது எப்படிப்பட்டது?
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பார்க்கச் சாதாரணமானவர்கள்போல் தோன்றலாம்.
அவர்கள் செய்யும் வேலை எளிதானதல்ல.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி இலியானா நபிலா வேலைக்கு வரும் ஒவ்வொரு நாளும் முக்கியமானதுதான்.
வானத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
இதில் எதிர்பாராத சவால் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும்.
குறிப்பாகச் சட்டென்று மாறும் வானிலை.
வானிலை மோசமாக இருக்கும்போது ஒரே நேரத்தில் 20 விமானிகளை உடனே தொடர்புகொள்ள வேண்டியிருக்கும்.
எல்லா விமானங்களையும் பாதுகாப்பாக வழி மாற்றிவிட அதிகக் கவனம் தேவை.
இந்த வேலையில் சேர்வதும் எளிதல்ல. பல கடுமையான மதிப்பீட்டுச் சோதனைகளைக் கடந்துவரவேண்டும்.
வேலை நேரம் தொடங்குவதற்குமுன் வானிலை, மாற்று ஏற்பாடுகள் போன்ற அந்த நாளின் நிலவரம் தெரிவிக்கப்படும்.
ஒன்றரை மணிநேர வேலைக்குப் பிறகு அரை மணிநேரம் ஓய்வெடுப்பது கட்டாயம்.
அமைதியாக அடுத்த வேலைக்குத் தயாராக வேண்டும்.
வேலை எவ்வளவு சவால்மிக்கதாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் மனநிறைவோடு ஒப்பிட்டால் எதுவுமே சிரமமாகத் தெரியாது.

ஆதாரம் : CNA