Skip to main content
Albert Street
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

Albert Street- ஒரு காலத்துல தீமிதித் திடல் தெரியுமா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் உள்ள ஆல்பர்ட் ஸ்டிரீட் (Albert Street) ஒரு காலத்துல தீமிதித் திடல் என்று அழைக்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பு அதனுடைய பெயர் எப்படி வந்தது?

1858இல் Victoria ராணியின் கணவர் இளவரசர் ஆல்பர்ட் அவருடைய பெயர்தான் சாலைக்கு வைக்கப்பட்டது.

அரச குடும்பத்தை நினைவுகூரவும் சிங்கப்பூருக்கும் பிரிட்டனுக்கும் இருக்கும் உறவைக் காட்டவும் அவ்வாறு செய்யப்பட்டது.

முந்தைய காலத்தில் ஆல்பர்ட் ஸ்டிரீட் கம்போங் பென்கூலன் (Kampong Bencoolen) என்ற பகுதியில இருந்தது.

அங்கு சுமத்ராவின் பென்கூலன் பகுதியிலிருந்து வந்த முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில தமிழர்கள் ஆல்பர்ட் ஸ்டிரீட்டைத் தீமிதி திடல் என்று அழைத்தார்கள்.

இப்போது ஒவ்வோர் ஆண்டும் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடக்கும் தீமிதித் திருவிழா அப்போது ஆல்பர்ட் ஸ்டிரீட்டில் நடைபெற்றது.

சிராங்கூன் ரோட்டில் இந்தியர்கள் பலர் வசித்தார்கள்.

ஆல்பர்ட் ஸ்டிரீட் சிராங்கூன் ரோட்டுக்குப் பக்கத்தில் இருந்ததால் தீமிதித் திருவிழா அங்கு நடந்தது.

1970களில் கடைக்கு வெளியே உட்காந்து சாப்பிடுவது ஆல்பர்ட் ஸ்டிரீட்டில் பிரபலமானது.

ஆனால் அது நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை.

1980களில் சாலை இருந்த பகுதி மாற்றியமைக்கப்பட்டது.

பல உணவுக் கடைகள் உணவங்காடிகளுக்கு இடம் மாறின.

இப்போது சாலையில் பாதசாரிகள் மட்டுமே நடக்கலாம்.

வாகனங்கள் செல்ல முடியாது. சுற்றி சிறு சிறு கடைகள்...

கலை, கலாசாரம், கற்றல், பொழுதுபோக்கு ஆகியவை இருக்குற பிராஸ் பாசா (Bras Basah), பூகிஸ் (Bugis) வட்டாரங்கள் மத்தியில் உள்ளது ஆல்பர்ட் ஸ்டிரீட்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்