சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
அழகு சிந்தும் அகார்-அகார் (Agar Agar) - எத்தனை வண்ணங்கள், எத்தனை வடிவங்கள்!

@baking8Connection/Instagram
தீபாவளிக்குப் பலரின் சமையலறைகளில் விதவிதமான பலகாரங்களைச் செய்வதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கலாம்.
தீபாவளி மட்டுமின்றி அனைத்துக் கொண்டாட்டங்களுக்கும் பலரும் கட்டாயம் செய்வது அகார் - அகார் (Agar Agar)
அதைக் கடற்பாசி என்றும் கூறுவது உண்டு.
பல வண்ணங்கள்... கண்ணுக்குக் கவர்ச்சியான வடிவங்கள்...
எதில் ஊற்றினாலும், அதன் உருவத்தைத் தனதாக்கிக்கொள்ளும் அகார்-அகார்.
ஆனால் அது தற்செயலாக உருவானதென்று தெரியுமா?

அகார்-அகார் எப்படி வந்தது?
1658ஆம் ஆண்டு ஜப்பானில் மினோயா டாரோஸேமொன் (Minoya Tarozaemon) என்பவரால் அது கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
கடற்பாசியைக் கொண்டு செய்த உணவு தூக்கிப்போட்ட பின், மறுநாள் கட்டியாக இருந்ததை அவர் கண்டார்.
ஆர்வத்தில் அதை மீண்டும் கொதிக்கவைத்து, ஆறவைத்தபோது அகார்-அகார் கிடைத்தது. பின் அதை அவர் விற்கத் தொடங்கினார்.

அகார் - அகார் என்றால் என்ன?
அதற்கு ஜப்பானில் டொக்கொரோட்டன் (tokoroten) என்று பெயர்.
அகார்-அகார் என்பது மலாய் மொழி. அதற்கு ஜெல்லி (jelly) அல்லது ஜெலட்டின் (gelatin) என்று அர்த்தம்.

சுவாரஸ்யமான தகவல்...
சமையலறையைத் தாண்டி, அகார்-அகாருக்கு ஒரு முக்கியமான பயன் உண்டு...
நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்குச் சென்றால், அங்கு எக்கச்சக்கமான அகார்-அகாரைக் காணலாம்.
அதற்குக் காரணம் நுண்ணுயிரியைத் தனிமைப்படுத்தவும் வளர்க்கவும் அகார்-அகார் பயன்படுத்தப்படுகிறது.
தீபாவளிக்கு.....
வரலாறு போதும், தீபாவளிக்கு வித்தியாசமான அகார் - அகார் செய்முறை உள்ளதா என்று சிலர் கேட்கலாம்...
செய்முறை ஏதும் இல்லை... ஆனால் வித்தியாசமான அகார் - அகார் உண்டு...

உண்மையில் இது அகார்-அகார்தான்...

பார்க்கவே இவ்வளவு அழகா... சாப்பிட்டுப் பார்த்தால்...

அகார்-அகார் கேக்
இது பெரும்பாலும் அகார்-அகாரால் செய்யப்பட்டது...

செய்து பாருங்கள்! விருந்தினரை அசத்துங்கள்!