டிசம்பரிலிருந்து அனைத்து ஊழியர்களும் நீக்குப்போக்காக வேலை செய்ய விண்ணப்பிக்கலாம்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: AFP/Roslan RAHMAN)
சிங்கப்பூரில், இந்த ஆண்டு டிசம்பரிலிருந்து அனைத்து ஊழியர்களும் நீக்குப்போக்காக வேலை செய்ய விண்ணப்பிக்கலாம்.
அந்த வேலை ஏற்பாட்டுக்கு விண்ணப்பம் செய்வதற்கான தெளிவான வழிகாட்டியைக் நிறுவனங்கள் கட்டாயம் கொண்டிருக்கவேண்டும்.
சிறிய - நடுத்தர நிறுவனங்களுக்கும் அது பொருந்தும்.
அரசாங்கம், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் ஆகியோரை உள்ளடக்கிய முத்தரப்புப் பணிக்குழுவின் அண்மை நடவடிக்கை அது.
அந்தக் கட்டாய வழிகாட்டி வாயிலாக வெவ்வேறு வகையான வேலைகளுக்கான நடைமுறைகளையும் எதிர்பார்ப்புகளையும் சீராக்க முடியும் என்று அந்தப் பணிக்குழு நம்புகிறது.
எனினும் முறையான கோரிக்கைகளுக்கு மட்டுமே நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு வழங்கப்படும்.
புதிதாக வேலையில் சேர்வோர் வழக்கமான வேலை நேரத்தைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.
வேலை உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
வழிகாட்டி கட்டாயம் என்றாலும் ஊழியர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்கும் முதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது.
முதலாளிகள் - ஊழியர்கள் ஆகிய 2 தரப்பினரும் பயனடையக்கூடிய சூழ்நிலையை இந்த வழிகாட்டி உருவாக்கித் தரும் என மனிதவள அமைச்சு நம்புகிறது.
புதிய வழிகாட்டியின்கீழ் ஊழியர்கள் எழுத்துபூர்வமாக விண்ணப்பங்களை முன்வைக்கும்போது நிறுவனங்கள் அதற்கான நடைமுறையைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பம் பெறப்பட்ட 2 மாதத்துக்குள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளிக்க வேண்டும்.
நிராகரிக்கப்படும் விண்ணப்பத்துக்குத் தகுந்த காரணம் கூறவேண்டும்.
எந்த மாதிரியான காரணங்களுக்காக ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம் என்பதை முத்தரப்புப் பணிக்குழு வெளியிடும்.
ஒருவேளை தங்களது விண்ணப்பம் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்று ஓர் ஊழியர் கருதினால் அவர்கள் முத்தரப்புப் பணிக்குழுவின் உதவியை நாடலாம்.