Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"நடுவானில் ஆட்டங்கண்ட SQ321 விமானத்தின் அனைத்துச் சிப்பந்திகளும் சிங்கப்பூர் திரும்பியுள்ளனர்"

வாசிப்புநேரம் -
"நடுவானில் ஆட்டங்கண்ட SQ321 விமானத்தின் அனைத்துச் சிப்பந்திகளும் சிங்கப்பூர் திரும்பியுள்ளனர்"

(கோப்புப் படம்: Handout via Reuters/Pongsakornr Rodphai)

நடுவானில் ஆட்டங்கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ321 விமானச் சிப்பந்திகள் அனைவரும் சிங்கப்பூருக்குத் திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அந்தத் தகவலை வெளியிட்டது.

விமானத்தில் பயணம் செய்த 52 பயணிகள் இன்னும் பேங்காக்கில் உள்ளனர். அதில் 34 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகளுடனும் சிப்பந்திகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறியது.

பயணிகளின் அன்புக்குரியவர்கள் பேங்காக்குக்குச் செல்ல கோரிக்கை விடுத்தபோது அதற்கு இணங்கியதாகவும் நிறுவனம் சொன்னது.

பயணிகள், சிப்பந்திகளின் நலனுக்கு அது முன்னுரிமை தருவதாகவும் கூறியது.

மே 21ஆம் தேதி லண்டனிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த SQ 321 விமானம் நடுவானில் மோசமாக ஆட்டங்கண்டது.

அதன் காரணமாக அது அவசரமாக பேங்காக்கில் தரையிறங்கியது.

அந்தச் சம்பவத்தில் 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் இறந்தார். பலருக்குக் காயம் ஏற்பட்டது.

விமானத்தில் 211 பயணிகளும் 18 சிப்பந்திகளும் இருந்தனர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்