Skip to main content
அனைத்து நகரமன்றங்களும் உயர்வான மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அனைத்து நகரமன்றங்களும் உயர்வான மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன

வாசிப்புநேரம் -
அனைத்து நகரமன்றங்களும் வட்டார நிர்வாகத்தில் பச்சை நிற மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. 4 மதிப்பீடுகளில் பச்சை நிறம் ஆக உயர்ந்தது.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிர்வாகப் பணிகள் பரிசீலிக்கப்பட்டன.

வட்டாரம் எந்த அளவுக்குச் சுத்தமாக இருக்கிறது, மின்தூக்கிகள் எவ்வளவு சீராகச் செயல்படுகின்றன, சேவை, பராமரிப்புக் கட்டணங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை வைத்து மதிப்பீடு வழங்கப்படுகிறது.

இவ்வாண்டுப் பொதுத்தேர்தலுக்குப் பல தொகுதிகளின் எல்லைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதால் நகரமன்றங்களிலும் மாற்றங்கள் இருக்கும். இதனால் தற்போதைய நிதியாண்டுக்கான பேட்டை நிர்வாக அறிக்கையை வெளியிடப்போவதில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியது. புதிய நகரமன்றங்கள் நடவடிக்கைகளை நிலைப்படுத்த நேரம் தேவைப்படுவதே அதற்குக் காரணம் என்று அமைச்சு விளக்கியது.

2026ஆம் நிதியாண்டு முதல் மீண்டும் அறிக்கைகளை வெளியிடப் போவதாக அது கூறியது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்