Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரி இந்தியப் பெண்களை ஏமாற்றியதாக இணையத்தில் வலம் வரும் குற்றச்சாட்டு-விசாரிப்பதாகச் சொல்கிறது காவல்துறை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரி இந்தியப் பெண்களை ஏமாற்றியதாக இணையத்தில் வலம் வரும் குற்றச்சாட்டு-விசாரிப்பதாகச் சொல்கிறது காவல்துறை

இணையத்தில் வலம் வந்த படங்கள்.

சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரி ஒருவர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியதாக இந்திய ஊடகங்களில் வலம் வரும் குற்றச்சாட்டுகள் குறித்து சிங்கப்பூர்க் காவல்துறை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

அது குறித்து 'செய்தி' காவல்துறையிடம் விவரம் கேட்டது. 

முகமது ரஃபீக் என்ற காவல்துறை அதிகாரியும் அவரது முன்னாள் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளதாகக் காவல்துறை கூறியது.

திரு. ரஃபீக் இந்தியாவைச் சேர்ந்த இரு பெண்களைத் திருமணம் செய்து விவாகரத்தும் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த இரு பெண்களிடமிருந்தும் திருமணத்திற்குப் பெற்ற நகை, கைக்கடிகாரம், மோதிரம் ஆகியவற்றை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்று அந்தப் பெண்களின் குடும்பத்தார் புகார் அளித்திருக்கின்றனர். 

திரு. ரஃபீக் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும், அதை அறிந்த அவரது முன்னாள் மனைவிகளின் குடும்பத்தார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தமிழ் நாட்டின் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

திரு. ரஃபீக் விசாரணைகளில் ஒத்துழைத்து வருவதாக சிங்கப்பூர்க் காவல்துறை 'செய்தி'-யிடம் தெரிவித்தது.

சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரிகள் நேர்மையையும் உயர்ந்த நடத்தையையும் கடைப்பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் காவல்துறை சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa