Skip to main content
மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மின்-சிகரெட் கலன்களைக் கடத்தியதாகச் சந்தேகம் - ஆடவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
மின்-சிகரெட் கலன்களைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

அவர் 26 வயது அப்துல் அமார் பின் மஹ்மூத் ஜுமாத் (Abdul Ammar Bin Mahmood Jumat).

நேற்று முன்தினம் (7 ஜனவரி) கேலாங் வட்டாரத்தில் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு மின்-சிகரெட்; நான்கு மின்-சிகரெட் கலன்களுடன் அமார் பிடிபட்டார்.

கூடுதலாக அவரிடமிருந்து ஆறு போத்தல் இருமல் மருந்தும்
1,000க்கும் மேற்பட்ட மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மின்-சிகரெட் கலன்களைச் சோதித்தபோது அவற்றில் எட்டோமிடேட் (etomidate) ரசாயனம் கலந்திருப்பது உறுதியானது.

விசாரணை தொடர்கிறது. வழக்கு அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மின்-சிகரெட் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன.

மின்-சிகரெட் இறக்குமதி, விற்பனை, விநியோகம் ஆகிய குற்றங்களுக்குச் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

சட்டவிரோத மருந்துப் பொருள்களை இறக்குமதி, விற்பனை அல்லது விநியோகம் செய்தால் அதிகபட்சம் ஈராண்டுச் சிறைத்தண்டனையும் 50,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்