Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

ஆச்சூ! தும்மல் பிரச்சினையால் அவதியுறும் சிலருக்கு Allergic Rhinitis இருக்கலாம்... அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியது?

வாசிப்புநேரம் -

தூசி படர்ந்த இடத்தில் அதிகத் தும்மல் ஏற்படுவது வழக்கமா? 

காற்றில் ஏதாவது புகையோ அழுக்கோ இருந்தால் போதும், மணிக்கணக்கில் தும்மல் வருகிறதா?

அப்படிப்பட்ட சிலர் Allergic rhinitis - நாசியழற்சியால்  பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். 

நாசியழற்சியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் மூத்த Otolaryngology நிபுணர் (காது, மூக்கு, தொண்டை நிபுணர்) டாக்டர் சோமா சுப்பிரமணியத்திடம் 'செய்தி' பேசியது. 

ஆஸ்துமா, ஒவ்வாமை, தோல் அழற்சி என்று மிகப் பரவலான அழற்சிகளின் பட்டியலில் நாசியழற்சியும் ஒன்று.
  • நாசியழற்சி சிங்கப்பூரில் எவ்வளவு பரவலானது? 

சிங்கப்பூரில் ஐவரில் ஒருவருக்கு (சுமார் 20 விழுக்காட்டு மக்களுக்கு) நாசியழற்சி இருக்கக்கூடும். 

(படம்: CNA)
  • Sinusitis  என்ற மூக்குப் பிரச்சினைக்கும் நாசியழற்சிக்கும் உள்ள வேறுபாடு?

நாசியழற்சி என்பது மூக்கின் உட்புறத்தில் இருக்கும் காற்று-இடைவெளிகளில் ஏற்படக்கூடியது என்று டாக்டர் சோமா விளக்குகிறார். ஆகவே, மூக்கினுள் ஏற்படும் வீக்கமே நாசியழற்சி என்பதாகும். 

Sinus என்பது மூக்கின் அருகிலும் அதைச் சுற்றியும் உள்ளது என்கிறார் அவர். மூக்கைச் சுற்றி ஏற்படும் வீக்கம் Sinusitis ஆகும். பொதுவாகக் கன்னங்கள், முகப் பகுதிகள் ஆகியவற்றில் வலி ஏற்படும். 

நாசியழற்சி ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள்? 

  • மூக்கில் அரிப்பு
  • தும்மல்
  • அதிக நீர் கசிகிற மூக்குச்சளி 
  • நாசி அடைப்பு

 

அரிய அறிகுறிகள்:

  • கண்களில் அரிப்பு
  • தொண்டை அரிப்பு
  • காதடைப்பு 
  • காதுகளின் இடைப்பகுதியில் நீர் தேங்கியிருப்பது
(Youtube / The Royal Children's Hospital Melbourne)

நாசியழற்சி எதனால் ஏற்படுகிறது என்று எப்படிக் கண்டறியலாம்? 

  • மருத்துவரிடம் சென்று அதைச் சோதிக்கலாம்
  • அழற்சி தரக்கூடிய சிலவற்றை மருத்துவர் மிகச் சிறிய அளவில் தோலில் குத்திச் சோதித்துப் பார்ப்பார். 
  • 20 நிமிடங்களுக்குள் நாசியழற்சி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறியலாம்

நாசியழற்சியை எப்படித் தவிர்க்கலாம்? 

  • மருத்துவச் சோதனையின் மூலம் கண்டறியப்படும் அழற்சி தரும் சிலவற்றை வீட்டிலிருந்து அகற்றிவிட முயற்சி செய்யவேண்டும்
  • உதாரணத்துக்குச் சிலருக்குத் தூசி அழற்சி உள்ளது... தூசி அடையக்கூடிய கம்பளம் போன்ற சிலவற்றை வீட்டிலிருந்து அகற்றிவிட்டால் நாசியழற்சி ஏற்படும் வாய்ப்பு குறைந்துவிடும்

நாசியழற்சி ஏற்படும்போது கடுமையான தும்மல், போன்ற அறிகுறிகளை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம்?

  • நாசியழற்சி உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்ளப் பரிந்துரைப்பர்
  • அவற்றைச் சரிவரத் தேவைப்படும்போது பயன்படுத்துவது நல்லது

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்