காமன்வெல்த் போட்டிகள் - முதல் பதக்கம் வென்றது சிங்கப்பூர்
(படம்: CGS / Lim Weixiang)
This audio is generated by an AI tool.
ஸ்காட்லந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெறும் காமன்வெல்த் (Commonwealth) போட்டிகளில் சிங்கப்பூர் முதல் பதக்கத்தை வென்றுள்ளது.
பெண்களின் சீருடற்பயிற்சிப் பிரிவில் 16 வயது அமண்டா யாப் (Amanda Yap) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அவர் பங்குபெறும் முதல் காமன்வெல்த் போட்டி இது.
13.233 புள்ளிகளைப் பெற்று அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றில் பெண்களுக்கான balance beam பிரிவுச் சீருடற்பயிற்சி போட்டியில் சிங்கப்பூர் பெற்றுள்ள இரண்டாம் வெள்ளிப் பதக்கம் இது.
அவரது வெற்றி சிங்கப்பூரர்களைப் பெருமை அடையச் செய்துள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) சமூக ஊடகம் வழி பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரியேனா ஸ்கோட் (Breanna Scott) 13.933 புள்ளிகளுடன் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
கனடாவைச் சேர்ந்த லியா மோனிக்கா ஃபோண்டேன் (Lia-Monica Fontaine) வெண்கலம் வென்றார்.
இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆண்கள் சீருடற்பயிற்சிப் போட்டியில் வெண்கலம் வென்றது.
24ஆம் தேதி தொடங்கிய காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை நடைபெறும்.