Skip to main content
சிங்கப்பூரில் Amazon நிறுவனம் ஆட்குறைப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் Amazon நிறுவனம் ஆட்குறைப்பு - 10% ஊழியர்கள் பாதிப்பு

வாசிப்புநேரம் -
Amazon நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலகம் அதன் உள்ளூர் பொருள் விநியோகச் சேவையை நிறுத்தவிருப்பதாகக் கூறியுள்ளது.

Amazon Fresh மளிகைப் பொருள் விற்பனைச் சேவையையும் நிறுத்தப்போவதாய் அது தெரிவித்தது.

சிங்கப்பூர் விற்பனையாளர்கள் Amazon விற்பனைத் தளத்தில் விற்பனை செய்வதும் முடிவுக்கு வருகிறது.

மாற்றங்களால் 10 விழுக்காட்டுக்கும் குறைவான ஊழியர்கள் வேலையை இழக்க நேரும்.

Amazon நிறுவனம் சிங்கப்பூரில் சுமார் 2,500 ஊழியர்களைக்கொண்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் மாற்றங்களால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று நிறுவனம் சொல்கிறது.

பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு உரிய ஆதரவும் முடிந்த அளவு மாற்று வேலை வாய்ப்புகளும் வழங்க முயற்சிகள் மேற்கொள்வதாக அது கூறியது.

மாற்றங்களால் பாதிக்கப்படும் உள்ளூர் விற்பனையாளர்களுக்கும் ஆதரவு வழங்கப்படும் என்று Amazon தெரிவித்துள்ளது.
 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்