Skip to main content
பிரபல உள்ளூர்க் கலைஞர் ஆனந்த கண்ணன் காலமானார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிரபல உள்ளூர்க் கலைஞர் ஆனந்த கண்ணன் காலமானார்

சிங்கப்பூரின் பிரபல உள்ளூர்க் கலைஞர் ஆனந்த கண்ணன் காலமானார். அவருக்கு வயது 48. 

வாசிப்புநேரம் -
பிரபல உள்ளூர்க் கலைஞர் ஆனந்த கண்ணன் காலமானார்
வெளியீடு : 17 Aug 2021 06:27AM புதுப்பிப்பு : 17 Aug 2021 07:06AM

சிங்கப்பூரின் பிரபல உள்ளூர்க் கலைஞர் ஆனந்த கண்ணன் காலமானார்.

அவருக்கு வயது 48. 

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நேற்றிரவு காலமானார்.

சுமார் 30 ஆண்டு காலமாக ஒரு நிகழ்ச்சிப் படைப்பாளராகவும், நடிகராகவும் பலர் மனத்தில் இடம்பிடித்தவர் ஆனந்த கண்ணன்.

ஆனந்த கண்ணன் AKT Theatres எனும் கலை அமைப்பை நிறுவி, நிர்வகித்துவந்தார்.

தமிழ்க் கலாசாரம் சார்ந்த கிராமியக் கலைகளை பயிலரங்குகள் வழி அவர் கற்பித்துவந்தார்.

சிங்கப்பூரில் பல பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர் படைத்திருக்கிறார்.

1990களில் இந்திய ஒளிவழிகளிலும் நிகழ்ச்சி படைத்தவர் ஆனந்த கண்ணன்.

அவரது மறைவுக்கு சிங்கப்பூர்ப் பிரபலங்களும், இந்தியத் திரையுலகப் பிரமுகர்களும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் வழி இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

உள்ளூர் பிரபலமான திரு வடிவழகன் தமது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்று தமது திறனை வெளிப்படுத்தியவர் ஆனந்த கண்ணன் என்று திரு வடிவழகன் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

ஆனந்த கண்ணன் மறைந்தாலும் அவர் ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்திருப்பார் என்று அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு, ஆனந்தக் கண்ணனுக்குப் புகழஞ்சலி செலுத்தினார்.

Facebook, Instagram, Twitter பக்கங்கள் வழி பலர் ஆனந்த கண்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்