அன்றும் இன்றும்: ஃபுல்லர்டன் கட்டடத்திற்கு கீழ் சுரங்கப்பாதையா?
ஃபுல்லர்டன் கட்டடத்திலிருந்த பொது அஞ்சல் அலுவலகத்தின் அடித்தளத்திலிருந்து துறைமுகம் வரை சுரங்கப் பாதை ஒன்று இருந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும்?

படம்: NAS
ஃபுல்லர்டன் கட்டடத்திலிருந்த பொது அஞ்சல் அலுவலகத்தின் அடித்தளத்திலிருந்து துறைமுகம் வரை சுரங்கப் பாதை ஒன்று இருந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும்?
அருகிலுள்ள வட்டாரங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய அஞ்சல்கள் சுரங்கப்பாதை வழியே கொண்டு செல்லப்படும்.
பொதிகளும், அஞ்சல்களும் தள்ளுவண்டிகளில் வைக்கப்பட்டு சுரங்கப்பாதையின் இறுதி வரை தள்ளப்படும். பிறகு, அவை மின்தூக்கியில் வைத்து துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
பின்னர் அவை மோட்டார் படகுகளால் கப்பல்களுக்கு கொண்டு செல்லப்படும் என்கிறார் சிங்கப்பூரின் முதல் ஆசிய அஞ்சல் அதிகாரி திரு. பால சுப்ரமணியன்.
உங்களுக்குத் தெரியுமா?
1928-இலிருந்து 1996 வரை பொது அஞ்சல் அலுவலகம் ஃபுல்லர்டன் கட்டடத்தில் அமைந்திருந்தது.
ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது ஜப்பானிய இராணுவ நிர்வாகத்துறையின் தலைமையகமும் அங்கு தான் அமைந்திருந்தது. 1997-இலிருந்து 2000 வரை புதுப்பிப்புப் பணிகள் நடந்தன.
1 ஜனவரி 2001 அன்று அது ஃபுல்லர்டன் ஹோட்டலாக பெயரெடுத்து அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
7 டிசம்பர் 2015 அன்று அது தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.