அன்றும் இன்றும்: பழங்கால சிங்கப்பூர் ஆறு
முன்பெல்லாம் சரக்குப் படகுகள் சிங்கப்பூர் ஆற்றோரம் மட்டுமல்லாமல் 10, 20 படகுகள் தாண்டியும் நிற்கும்.

படம்: NAS
முன்பெல்லாம் சரக்குப் படகுகள் சிங்கப்பூர் ஆற்றோரம் மட்டுமல்லாமல் 10, 20 படகுகள் தாண்டியும் நிற்கும்.
படகு பச்சை நிறத்தில் இருந்தால் அதன் உரிமையாளர் ஹொக்கியென் மொழிப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பார். அவர்களில் பெரும்பாலோர் கிளார்க் கீயில் படகுகளை நிறுத்துவர். படகு சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தியோச்சியூ மொழிப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தம் என்று பொருள்.
தமது தந்தையின் படகைச் சென்றடைய பல படகுகளைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் என்று நினைவுகூருகிறார் முன்பு சிங்கப்பூர் ஆற்றுக்கு அருகில் வசித்து வந்த திரு ஃபிரான்சிஸ் புன்.
உங்களுக்குத் தெரியுமா?
முன்பெல்லாம் சாலைகளுக்குப் படகுகளின் பெயரை வைப்பது வழக்கம். ஆனால் இப்பொழுது சம்ப்பான் பிளேஸ் என்ற சாலை மட்டுமே எஞ்சியுள்ளது. டுவாக்கோவ் பிளேஸ், டோங்க்காங் பிளேஸ் போன்ற இடங்கள் இப்பொழுது கேலாங் பூங்கா இணைப்பில் சேர்க்கப்பட்டு விட்டன.