அங் மோ கியோ புளோக்கில் தீ - நால்வர் மருத்துவமனையில்
அங் மோ கியோவில் (Ang Mo Kio) உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கில் தீ மூண்டதில் 4 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங் மோ கியோ அவென்யூ 4 புளோக் 641-இல் மின்தூக்கி அருகே தீப்பற்றியது என்று நேற்றிரவு 11.15 மணிக்குத் தகவல் வந்ததாய் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.
எட்டாம் மாடியில் மின்தூக்கி அருகே தனிநபர் நடமாட்டச் சாதனம் தீப்பிடித்ததாக அவர்கள் Facebook பக்கத்தில் தெரிவித்தனர்.
தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.
தீப்புகையை நுகர்ந்த நால்வர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
சுமார் 200 பேர் பாதிக்கப்பட்ட புளோக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.