Skip to main content
அங் மோ கியோவில் குழாய் உடைந்து தண்ணீர் பாய்ந்தோடியது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அங் மோ கியோவில் குழாய் உடைந்து தண்ணீர் பாய்ந்தோடியது

வாசிப்புநேரம் -
அங் மோ கியோவில் குழாய் உடைந்து தண்ணீர் பாய்ந்தோடியது
Facebook/Iriesjiejie
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அங் மோ கியோ வட்டாரத்தில் குழாய் உடைந்ததில் நீர் பாய்ந்தோடியது. 

அங் மோ கியோ அவென்யூ 1 புளோக் 222க்கு அருகிலிருக்கும் குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டது.

அதனால் பக்கத்திலிருந்த SPC பெட்ரோல் நிலையம்வரை தண்ணீர் சென்றது.

நண்பகல் 12 மணிக்குச் சம்பவம் பற்றித் தகவல் கிடைத்ததாகத் தேசியத் தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்தது.

உடனே குழாயைச் சரிசெய்ய ஊழியர்களை அனுப்பியதாகவும் அமைப்பு கூறியது.

சம்பவ இடத்தைச் சுற்றியிருக்கும் வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. 

தண்ணீர் விநியோகம் தடைபடவில்லை. 

நீர்க்குழாயில் ஏன் கசிவு ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.

ஆதாரம் : Others/Social media

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்