The Animal Lodge - 8 உரிமங்கள் புதுப்பிக்கப்படாது
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Matthew Mohan)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
The Animal Lodge எனும் விலங்குக் காப்பகத்தில் உள்ள சில சேவை வழங்குநர்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது என்று விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுங்காய் தெங்காவில் (Sungei Tengah) உள்ள The Animal Lodgeஇல் 35 வாடகைதாரர்களில் 8 சேவை வழங்குநர்கள் குத்தகை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவில்லை என்று அது குறிப்பிட்டது.
நாய்களை இனப் பெருக்கம் செய்யும் 7 நிறுவனங்களும் செல்லப் பிராணிகளைத் தற்காலிகமாகக் கவனித்துக்கொள்ளும் வசதி வழங்கும் நிறுவனமும் அவற்றில் அடங்கும்.
விலங்கு நலத்தையும் செல்லப் பிராணிப் பராமரிப்புத் துறையையும் மேம்படுத்துவதற்கான குறைந்தபட்ச நிபந்தனைகளை அவை பூர்த்திசெய்யத் தவறியது தெரியவந்தது.
எஞ்சிய நிறுவனங்கள், சேவை வழங்குநர்களின் வாடகைக் குத்தகை வரும் டிசம்பரில் புதுப்பிக்கப்படும்.

ஆதாரம் : CNA