Skip to main content
கிளி வளர்ப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கிளி வளர்ப்பு - விழிப்புணர்வு முகாம்

வாசிப்புநேரம் -
கிளி வளர்ப்பு -  விழிப்புணர்வு முகாம்

படம்: Parrot Society (Singapore)

வெளியீடு : 30 May 2026 03:04PM புதுப்பிப்பு : 30 May 2026 03:21PM

சிங்கப்பூரில் கிளிகளைப் பராமரிக்கும் வழிகாட்டிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.

கிளி வளர்ப்போர் அல்லது வளர்க்க விரும்புவோர் அதை எவ்வாறு பொறுப்பாகப் பராமரிக்கலாம் என்பதை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

பறவை நிபுணர்களின் ஆலோசனைகள் வழிகாட்டியில் இடம்பெறுகின்றன.

பொறுப்பான பறவை பராமரிப்பு குறித்த விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியில் அந்த வழிகாட்டி அறிமுகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் பெயர் 'Friends of Parrots Day'.

அத்தகைய நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முன்முறை.

ஜூரோங் ஏரித் தோட்டத்தில் (Jurong Lake Gardens) உள்ள கார்டன்ஹவுஸில் (Gardenhouse) நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்கக்கூடிய விளையாட்டுகளும் இடம்பெற்றன.

விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவும் சிங்கப்பூர்க் கிளி சமூகமும் சேர்ந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்