Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாலையும் சரித்திரமும் - அண்ணாமலை அவென்யூ

புக்கிட் தீமா சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, நம்மில் பலர், அண்ணாமலை அவென்யூவைப் பார்த்திருக்கக்கூடும். அந்த வீதியின் பெயரில் இடம்பெற்றுள்ள அண்ணாமலை என்பவர் யார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

வாசிப்புநேரம் -

1920களில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் வர்த்தக சபையை டேங் ரோட்டில் அண்ணாமலை செட்டியார் நிறுவினார். Sixth அவென்யூ பகுதியில் அவர் பல சொத்துகளை வைத்திருந்ததால் அவரது நினைவாக அண்ணாமலை அவென்யூ என்று பெயர் சூட்டப்பட்டது.

தமிழ்நாட்டில் ராமச்சந்திரபுரம் என்ற கிராமத்தில் அவர் ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். கொடை வள்ளலாகவும் திகழ்ந்தார்.

நாவுக்குச் சுவையூட்டும் பல்வேறு உணவகங்கள் தற்போது அந்தப் பகுதியில் நிறைந்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்