Skip to main content
LTA வேலைகளால் சொத்துச் சேதம் என்று ஆண்டுக்கு எத்தனை புகார்கள்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

LTA வேலைகளால் சொத்துச் சேதம் என்று ஆண்டுக்கு எத்தனை புகார்கள்?

வாசிப்புநேரம் -

நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் சொத்துச் சேதம் தொடர்பில் ஆண்டுதோறும் சுமார் 100 புகார்கள் பதிவாகின்றன.

தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் (jeffrey Siow) நாடாளுமன்றக் கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்தார்.

அனைத்துப் புகார்களும் முழுமையாக விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

ஒரு சில புகார்களில் மட்டுமே சேதங்கள் கட்டுமானப் பணிகளால் ஏற்படுவது உறுதிசெய்யப்படுகிறது.

அவற்றுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்படுவதாக அமைச்சர் சொன்னார்.

கட்டுமானப் பணிகளால் சொத்துச் சேதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க ஊழியர்களுக்குத் தகுந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றனவா என்பதைக் குத்தகையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

வேலையிடத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றி ஊழியர்களுக்கு தினமும் வேலை தொடங்குவதற்கு முன் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார் திரு சியாவ்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்