Skip to main content
ICA இணையத்தளத்தில் வீட்டு முகவரியை மாற்றுவதில் முறைகேடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ICA இணையத்தளத்தில் வீட்டு முகவரியை மாற்றுவதில் முறைகேடு - மேலும் 6 பேர் கைது

வாசிப்புநேரம் -
ICA இணையத்தளத்தில் வீட்டு முகவரியை மாற்றுவதில் முறைகேடு -  மேலும் 6 பேர் கைது

(கோப்புப் படம்: ICA)

சிங்கப்பூரில் வீட்டு முகவரியை அனுமதியின்றி மாற்றி முறைகேடு செய்தது தொடர்பில் மேலும் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் இணையத்தளத்தில் அவர்கள் அவ்வாறு செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

அந்த முறைகேடு தொடர்பில் இதுவரை கைதுசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கைதுசெய்யப்பட்டவர்களில் ஐவர் ஆண்கள். ஒருவர் பெண்.

தீவு முழுதும் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

இதற்குமுன்னர் கைதுசெய்யப்பட்ட 7 பேர் மீது நேற்று (வெள்ளி) காலை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கைது செய்யப்பட்ட 13 பேருக்கும் குறைந்தது 66 சம்பவங்களில் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்