Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து இளையர்களிடம் எடுத்துச் சொல்ல Tik Tokஇல் குறும்படம்

வாசிப்புநேரம் -
போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து இளையர்களிடம் எடுத்துச் சொல்ல Tik Tokஇல் குறும்படம்

(கோப்புப் படம்: AP Photo/Kiichiro Sato)

போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து இளையர்களிடம் எடுத்துச் சொல்ல, புத்தாக்கமிக்க வழிகளில் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 

அதன் தொடர்பில், போதைப் புழக்கத்துக்கு எதிரான தேசிய மன்றம் Tik Tok செயலியில் புதிய குறும்படத் தொடரை வெளியிடவுள்ளது. 

ஈராண்டுகளுக்கு நீடிக்கும் அந்த இயக்கம், இணையத்தை அதிகம் பயன்படுத்தும் இளையர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

போதைப் பொருள்களோடு வெவ்வேறு வகையில் சம்பந்தப்பட்டுள்ள கதாபாத்திரங்கள், புதிய குறும்படத் தொடரில் சித்திரிக்கப்படும்.

புதிதாக போதைப் பொருள் புழங்கத் தொடங்குவோரில் 60 விழுக்காட்டினர், 30 வயதுக்குக் குறைந்தவர்கள். 

அந்த இளையர்கள், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகளை முழுமையாக உணர்ந்திருப்பதில்லை.

குறும்படத்தில் தோன்றும் இளம் நட்சத்திரங்கள், தங்களது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வர். 

அது, இளையர்களை ஈர்க்க உதவும். 

மன்றத்தின் புதிய இயக்கம், போதைப் புழங்கிகள் தங்களது வாழ்க்கைக்குத் தாங்களே பொறுப்பேற்க முன்வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

உலகளாவிய கண்ணோட்டமும் இணைய அறிமுகமும் உள்ள இக்கால இளையர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களைச் சென்றடைய மன்றம் விரும்புகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa