முறியடிக்கப்பட்ட மோசடிகள், $218,900 இழப்பு தடுக்கப்பட்டது - காவல்துறை
வாசிப்புநேரம் -

(படம்: Envato Elements)
சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடி எதிர்ப்புப் பிரிவு Standard Chartered, DBS ஆகிய வங்கிகளுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் காரணமாக 218,900 வெள்ளி இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் நிகழ்ந்த இரு மோசடிச் சம்பவங்கள் தடுக்கப்பட்டன.
முதல் சம்பவத்தில் 69 வயதுப் பெண் சென்ற ஆண்டு (2024) நவம்பரில் மோசடிக்காரருடன் இணையத்தின் வழி நண்பரானார்.
மோசடிக்காரர் அளித்த போலியான வேலைவாய்ப்பை ஏற்று அவர் கூறியதுபோல பணத்தைக் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினார்.
டிசம்பர் 3ஆம் தேதி (2024) Standard Chartered கிளையில் 200,000 வெள்ளியைத் தன் கணக்கிலிருந்து பெற முயன்றபோது அவரிடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை.
அதன் அடிப்படையில் அவர் மோசடிக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வங்கியின் மோசடி எதிர்ப்புப் பிரிவு காவல்துறைக்குச் சம்பவம் குறித்துத் தகவல் அளித்தது.
இரண்டாம் சம்பவத்தில் மோசடிக்காரர் 56 வயதுப் பெண்ணிடம் WeChat நிறுவன ஊழியர் போல உரையாடி காப்புறுதித் திட்டத்தை ரத்துச்செய்வதற்காக 69,000 வெள்ளிக்கும் மேல் பணம் கேட்டார்.
அந்தப் பெண்ணும் பணத்தை அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றினார். பிறகு டிசம்பர் 7ஆம் தேதி (2024) அந்த நபருக்கு மேலும் 18,900 வெள்ளிக்கு மேல் பணம் அனுப்ப முயன்றார்.
DBS வங்கியின் மோசடி எதிர்ப்புப் பிரிவு அந்தப் பெண் மோசடிக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பரிவர்த்தனையை முடக்கிக் காவல்துறைக்குத் தகவல் அளித்தது.
இரு வங்கிகளின் ஊழியர்களும் உரிய நேரத்தில் காவல்துறைக்குத் தொடர்புகொண்டு எச்சரித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் மோசடிக்காரர்களிடம் மேலும் பணத்தை இழப்பது முறியடிக்கப்பட்டது.

ஆதாரம் : Others