வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ $75,000 நன்கொடை வழங்கும் Asia Pacific Breweries அறநிறுவனம்
Asia Pacific Breweries அறநிறுவனம், COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ 75,000 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது.

படம்: Reuters / Edgar Su
Asia Pacific Breweries அறநிறுவனம், COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ 75,000 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் அறநிதிப் பிரிவு நிர்வகிக்கும் வெளிநாட்டு ஊழியர் உதவி நிதியில் அந்தத் தொகை சேர்க்கப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களின் அன்றாடத் தேவைகளுக்கும், பயணங்கள் ரத்தானதால் சொந்த நாடு திரும்ப முடியாமல் இங்கு தங்குமிடம் இன்றித் தவிப்போருக்கும் உதவ, அந்த நிதி பயன்படுத்தப்படும்.
கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் நடப்பிலிருக்கும் காலக்கட்டத்தில் வேலைசெய்ய முடியாதோருக்கு நிதியாதரவு வழங்கவும் அது வகைசெய்யும்.