சிங்கப்பூரின் மேல்முறையீட்டு நடைமுறைகளைப் பற்றித் தெரியுமா?
சிங்கப்பூரில் மேல்முறையீடு செய்யும் நடைமுறைகள் என்னென்ன?
அது பற்றிய விவரங்கள் இதோ..
1) மேல்முறையீடு என்றால் என்ன?
குற்றஞ்சாட்டப்பட்டவர் அல்லது அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்புகளை மாற்றும் முயற்சியில் மேல்முறையீடு செய்யலாம்.
a) குற்றவாளி எனத் தீர்ப்பு அல்லது விடுதலை செய்தல்
b) தண்டனை
c) நீதிமன்ற ஆணை
2) யார் மேல்முறையீடு செய்யலாம்?
⚖️ குற்றஞ்சாட்டப்பட்டவர் மேல்முறையீடு செய்யலாம்.
⚖️ அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
⚖️ பாதிக்கப்பட்டவர்களும் நீதிமன்ற வழக்கில் சம்பந்தப்படாதவர்களும் மேல்முறையீடு செய்ய முடியாது.
3) எதற்கு மேல்முறையீடு செய்யலாம்?
⚖️ நீதிமன்றம் எடுத்த முடிவிற்கு எதிராக ஒருவர் மேல்முறையீடு செய்யலாம்.
⚖️ ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவர் அதற்குப் பிறகு தாம் குற்றத்தைப் புரியவில்லை என்று மேல்முறையீடு செய்ய முடியாது.
⚖️ ஆனால் அவர் தம்முடைய தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம்.
⚖️ வழக்கு விசாரணைக்குப் பின் ஒருவர் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதற்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்யலாம்.
⚖️ அவர் தண்டனைக்கு எதிராகவும் நீதிமன்றம் விதிக்கும் ஆணைகளுக்கு எதிராகவும் மேல்முறையீடு செய்யலாம்.
⚖️ மேல்முறையீடு செய்வதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏன் திருப்தி அளிக்கவில்லை என்பதற்கான தகுந்த காரணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
4) மேல்முறையீடு செய்வதற்குக் கால வரம்பு உள்ளதா?
⚖️ ஆம். தண்டனை விதிக்கப்பட்டவுடன் 14 நாள்களுக்குள் மேல்முறையீட்டுக்கான அறிவிப்பைத் தாக்கல் செய்யவேண்டும்.
⚖️ அப்போதுதான் மேல்முறையீடு நடைமுறைகள் தொடங்கும்.
⚖️ குற்றவாளி என அளிக்கப்படும் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்யமுடியாது. குற்றத்திற்குத் தண்டனை விதிக்கப்பட்டவுடன் 14 நாள்களுக்குள் மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.
⚖️ அந்த 14 நாள்களில் வாரஇறுதியும் அடங்கும்
⚖️ அந்த 14 நாள்களில் தண்டனை விதிக்கப்பட்ட தேதி சேர்க்கப்படமாட்டாது.