Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

PUB தேசியத் தண்ணீர் அமைப்பின் புதிய தலைமை நிர்வாகி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் தேசியத் தண்ணீர் அமைப்பான PUB புதிய தலைமை நிர்வாகியைப் பெறுகிறது.

திரு ஓங் சு சின் (Ong Tze-Ch’in) வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அதன் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.

திரு ஓங் தொடர்ந்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகிப்பார்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு இன்று (19 செப்டம்பர்) வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.

தற்போது PUBஇன் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றும் திரு கோ சி ஹாவ் (Goh Si Hou) அரசாங்கத் துறையில் வேறு மூத்த தலைமைத்துவப் பொறுப்பேற்பார்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு திரு கோ ஆற்றிய சேவைக்கு அதன் நன்றியைத் தெரிவித்தது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்