மூத்த அமைச்சர் லீக்கு இந்தியச் சமூகம் நடத்தும் பாராட்டு விழா
வாசிப்புநேரம் -
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) கௌரவித்து அவருக்கு நன்றி கூற, சிங்கப்பூர் இந்தியச் சமூக அமைப்புகளும் வர்த்தகங்களும் இணைந்து விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
2004இலிருந்து 2024 வரை அவர் பிரதமராக இருந்த காலக்கட்டத்தின்போது இந்தியச் சமூகத்துக்கு அவர் காட்டிய ஆதரவுக்காக அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், இந்தியச் சமூகத்தின் ஆடல், பாடல், கலை, கலாசாரப் படைப்புகள் மேடையேற்றப்படும்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
அவர்களோடு துணையமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய மற்ற முக்கியப் பிரமுகர்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.

ஆதாரம் : Others