Skip to main content
Arab Street
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

Arab Street - ஒருகாலத்தில் அது பூக்கடைச் சடக்கு என்று தெரியுமா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அராப் ஸ்ட்ரீட் (Arab Street)...

அந்தப் பெயருக்கு 2 விளக்கங்கள் உள்ளன.

முதல் விளக்கம்.

அராப் ஸ்ட்ரீட் இருக்கும் பகுதி அரபு வர்த்தகர் சையது அலி முகமது அல் ஜுனியட்டுக்குச் (Syed Ali bin Mohamed Al Junied) சொந்தமாக இருந்தது.

பின்னர் அது அரபுக் கம்பமாக மாறியது.

அப்படித்தான் அராப் ஸ்ட்ரீட் என்று அதற்குப் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இரண்டாவது விளக்கம் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸுடன் (Sir Stamford Raffles) தொடர்புடையது.

1820-களில் அவர் சிங்கப்பூருடைய நிலத்தை வெவ்வேறு தேவைகளுக்காக வகுத்தார்.

அப்போது ஒவ்வோர் இனத்துக்கும் ஓர் இடம் என்று அவர் பிரித்தார்.

சீனர்களுக்கு சைனாடவுன்..

இந்தியர்களுக்கு லிட்டில் இந்தியா..

அரபு, முஸ்லிம் மக்களுக்குக் கம்போங் கிளாம்.

அரபு மக்கள் அங்கிருந்ததால் அராப் ஸ்ட்ரீட் எனும் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

அராப் ஸ்ட்ரீட் என்று சொல்லப்பட்டாலும் தமிழர்கள் அதை வேறுமாதிரி அழைத்தார்கள்.

பூக்கடைச் சடக்கு... அதாவது பூக்களை விற்கும் சாலை.

அராப் ஸ்ட்ரீட்டில் பல ஆண்டுகளாக ஜாவானிய மக்கள் வாழ்ந்தார்கள்.

உணவுக்கடை, பூக்கடை இப்படிப் பல வியாபாரங்களை நடத்தினர்.

ஜாவானியப் பெண்கள் அங்கு பூக்களை விற்பனை செய்துவந்தார்கள்.

அதனால் இந்தியர்கள் அதைப் பூக்கடைச் சடக்கு என்று அழைத்தார்கள்.

நாளடைவில் கம்போங் கிளாமில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்தன.

அப்போது அவர்களுடைய வியாபாரம் குறையத் தொடங்கியது.

1989ஆம் ஆண்டில் அராப் ஸ்ட்ரீட் இருக்கும் கம்போங் கிளாம் பகுதி பாதுகாக்கப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய காலக்கட்டத்தில் அராப் ஸ்ட்ரீட்டில் பழையதும் புதியதும் கலந்துள்ளன.

பாரம்பரியத் தொழில்களும் உள்ளன.

புதிய வியாபாரங்களும் உள்ளன.

அது அராப் ஸ்ட்ரீட்டின் தனித்துவமான அம்சம் என்றே சொல்லலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்