சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
தீபாவளி வாழ்த்து அட்டைகள் - மக்கள் இன்னமும் வாங்குகிறார்களா?
இன்றைய தொழில்நுட்பக் காலத்தில், விரல்பட வாழ்த்துகளை ஒரு நொடியில் பரிமாறிவிடலாம். ஆனால், பாரம்பரிய முறையில் வாழ்த்து அட்டைகளை வாங்கி கைப்பட வாசகங்களை எழுதி அனுப்புவோரும் நம்மிடையே உள்ளனர்.
அதற்குச் சான்று தீபாவளிச் சந்தையில் விற்கப்படும் தீபாவளி வாழ்த்து அட்டைகள்.
80, 90கள் வாழ்த்து அட்டைகளின் பொற்காலமாக விளங்கியது.
ஆயிரக்கணக்கான வாழ்த்து அட்டைகள் தீபாவளி காலக்கட்டத்தில் விற்கப்பட்டன.
முன்பு போல வாழ்த்து அட்டைகளின் விற்பனை அதிகமாக இல்லாதபோதிலும் மூத்தோரிடைய அவற்றுக்கு வரவேற்பு இன்றளவும் உள்ளதாக “செய்தி”யிடம் பேசிய கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
இளையர்கள் சிலரும் வாழ்த்து அட்டைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
வாழ்த்து அட்டைகளின் விற்பனை பற்றி மேல் விவரங்களை அறிந்து வந்தது “செய்தி”.