Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கோவனில் ஆயுதமேந்திய கொள்ளை - பெண்ணின் கழுத்தை நெரித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
கோவனில் ஆயுதமேந்திய கொள்ளை - பெண்ணின் கழுத்தை நெரித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது

(படம்: Singapore Police Force)

கோவன் வட்டாரத்தில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 28 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (30 ஜூலை) ரிச்சர்ட்ஸ் பிளேஸில் (Richards Place) நடந்த சம்பவம் குறித்து இரவு சுமார் 8.25 மணியளவில் தகவல் பெற்றதாகக் காவல்துறையினர் கூறினர்.

பெண் ஒருவரிடமிருந்து பணம், Rolex கைக்கடிகாரம், 2 வைர மோதிரங்கள் ஆகியவற்றை ஆடவர் 
கொள்ளையடித்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தி வைத்திருந்த சந்தேக நபர் பெண்ணை மின்சாரக் கம்பிவடத்தைக் கொண்டு கழுத்தை நெரிக்க முனைந்ததாகக் கூறப்படுகிறது.

பெண்ணை ஹவ்காங் ஸ்டிரீட் 21-இல் உள்ள தானியக்க வங்கி இயந்திரத்துக்கு அழைத்துச் சென்ற ஆடவர், இயந்திரத்திலிருந்து 2,000 வெள்ளி எடுக்கும்படி மிரட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இணைய வங்கிக் கணக்கிலிருந்து 50,000 வெள்ளி மாற்றும்படியும் அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்துக்குரிய ஆடவரின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டது.

அவர் நேற்று (5 ஆகஸ்ட்) கைதுசெய்யப்பட்டார்.

300 வெள்ளி ரொக்கம், rolex கைக்கடிகாரம், ஒரு வைர மோதிரம் ஆகியவை மீட்கப்பட்டன.

பெண்ணின் வங்கிக்கணக்கு வழி பணம் மாற்றப்பட்ட கணக்கிலிருந்து 47,000 வெள்ளிக்கு அதிகமான தொகையும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ஆடவர் மீது இன்று (6 ஆகஸ்ட்) குற்றஞ்சாட்டப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தது 
12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa