சிங்கப்பூரில் ஆட்குறைப்புச் செய்யப்பட்ட பெரும்பாலானோர் அனுகூலம் பெற்றனர்
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் ஆட்குறைப்புச் செய்யப்பட்ட 10 ஊழியர்களில் சுமார் 9 பேர் அனுகூலத்துக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
2020 முதல் 2025 வரை ஆட்குறைப்பு அனுகூலத்துக்குத் தகுதிபெற்றவர்கள் பற்றிய விவரம் இன்று நாடாளுமன்றத்தில் பகிரப்பட்டது.
ஆட்குறைப்புச் செய்யப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினர் வேலையில் இருந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் இரண்டு வாரச்சம்பளத்தை அனுகூலமாகப் பெற்றனர்.
இது மனிதவள அமைச்சின் முத்தரப்பு வழிகாட்டிக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
இன்னும் அதிக அனுகூலத் தொகை கொடுக்கலாமா என்ற கேள்விக்குப் பதில் சொன்ன மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் (Koh Poh Koon), ஏற்கனவே சிரமத்தில் இருக்கும் நிறுவனங்களை மேலும் சிரமப்படுத்துவது சரியாக இருக்காது என்றார்.
அதனால் மேலும் அதிக ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்யும் நிலை ஏற்படலாம் என்றார் அவர்.