Skip to main content
$1,500 அரோவானா மீன்... காரில் 4 மணி நேரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

$1,500 அரோவானா மீன்... காரில் 4 மணி நேரம் - மீன் மாண்டது, விநியோக ஓட்டுநருக்கு அபராதம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

விநியோக ஓட்டுநர் ஒருவர் வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பதற்காக 1,500 வெள்ளி மதிப்பிலான அரோவானா (arowana) மீனை மீன் பண்ணையிலிருந்து எடுத்துச் சென்றார்.

அதைச் சுமார் 4 மணி நேரம் காரிலேயே வைத்திருந்தார்.

மீன் மாண்டது.

விநியோக ஓட்டுநரான 26 வயது முகமது இஸ்மான் ரோஸ்லிக்கு (Mohamad Isman Rosli) 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மீனை 4 மணி நேரம் காரில் வைத்துக் கொன்று, தீங்கு விளைவித்த ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

மீனை மீண்டும் பண்ணையில் கொடுத்துவிட்டதாகக் காவல்துறை அதிகாரியிடம் பொய் சொன்ன ஒரு குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.

இஸ்மான் Lalamove நிறுவனத்தில் பகுதிநேர விநியோக ஓட்டுநராகப் பணியாற்றினார்.

சென்ற ஆண்டு (2025) அக்டோபரில் சிவப்பு அரோவானா மீனை விநியோகிக்கும் பணியைப் பெற்றார்.

மீனைப் பண்ணையிலிருந்து எடுத்துக்கொண்ட சுமார் 40 நிமிடங்களில் செயலியில் ஏற்பட்ட ஒரு கோளாற்றால் அது ரத்தானது.

ஆனால் இஸ்மான் மீனைப் பண்ணையிலும் திருப்பிக் கொடுக்கவில்லை. வாடிக்கையாளரிடமும் ஒப்படைக்கவில்லை,

அதைக் காரிலேயே வைத்துவிட்டார்.

மீன் மாண்டதை அறிந்ததும் அதை வீசிவிட்டார்.

அதைப் பற்றி யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை,

மறுநாள் மீன் பண்ணை காவல்துறையிடம் புகார் அளித்தது.

மாண்ட மீனை வீசியதை இஸ்மான் ஒப்புக்கொண்டார்.

அவர் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கவில்லை.

தீங்கு விளைவித்த செயலுக்கு அவருக்கு ஓராண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்