Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

O-Level தேர்வுகளில் மாணவர்கள் மோசடி செய்ய உதவிய துணைப்பாட நிலையத்தின் முன்னாள் தலைமை ஆசிரியருக்குக் கைதாணை

வாசிப்புநேரம் -
O-Level தேர்வுகளில் மாணவர்கள் மோசடி செய்ய உதவிய துணைப்பாட நிலையத்தின் முன்னாள் தலைமை ஆசிரியருக்குக் கைதாணை

(கோப்புப் படம்: TODAY)

சாதாரண நிலைத்தேர்வுகளில் மாணவர்கள் மோசடி செய்ய உதவிய துணைப்பாட நிலையத்தின் முன்னாள் தலைமை ஆசிரியருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

56 வயது போனி போ யுவான் நீ (Pony Poh Yuan Nie) தமது சிறைத்தண்டனையைத் தொடங்க நீதிமன்றத்திற்குச் செல்லத் தவறினார்.

அதனால் அவருக்கு நேற்று முன்தினம் (23 நவம்பர்) கைதாணை பிறப்பிக்கப்பட்டது. 

அவர் மீது 27 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.

2020ஆம் ஆண்டு அவருக்கு 4 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவரின் மேல்முறையீடு இந்த வாரம் நிராகரிக்கப்பட்டது.

போவுடன் மேலும் இருவர் அந்த மோசடியில் ஈடுபட்டிருந்தனர்.

மூவரும் Zeus கல்வி நிலையத்தில் பணிபுரிந்தனர்.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 தேர்வுகளில் 6 மாணவர்கள் மோசடி செய்ய அவர்கள் உதவினர்.

மாணவர்களின் உடலில் கருவிகள் ஒட்டப்பட்டிருந்தன.

தனியார் மாணவராகத் தேர்வுகளை எழுதப் பதிவு செய்த டான் ஜியா யான் (Tan Jia Yan ) தமது திறன்பேசி மூலம் கேள்வித்தாளைத் துணைப்பாட நிலையத்திற்கு அனுப்பினார்.

நிலையத்தில் இருந்த இரு ஆசிரியர்களும் பதில்களை மாணவர்களிடம் கூறினார்.

மாணவர் ஒருவர் தேர்வுக் கூடக் கண்காணிப்பாளரிடம் பிடிபட்டார்.

இந்த மோசடித் திட்டத்தைத் தீட்டியது போ என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

ஆதாரம் : CNA/ll(rj)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa