Skip to main content
ஆர்சனல் நட்சத்திரம் சிங்கப்பூரில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆர்சனல் நட்சத்திரம் சிங்கப்பூரில்

வாசிப்புநேரம் -
ஆர்சனல் (Arsenal) காற்பந்துக் குழுவில் புதிதாக இணைந்துள்ள நட்சத்திர ஆட்டக்காரர் விக்டர் கியோகெரேஸ் (Viktor Gyokeres) சிங்கப்பூர் வந்துள்ளார்.

போர்ச்சுகல் காற்பந்துக் குழுவான ஸ்போர்ட்டிங் லிஸ்பனிலிருந்து (Sporting Lisbon) அவர் இணைந்துள்ளதாக நேற்று ஆர்சனல் அறிவித்தது.

அவரை வாங்குவதற்கு ஆர்சனல் சுமார் 57 மில்லியன் பவுண்ட்ஸ் (சுமார் 98 மில்லியன் வெள்ளி) செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னிலை ஆட்டக்காரரான கியோகெரேஸ் பிரிமியர் லீக் போட்டியை வெல்லத் துடிக்கும் ஆர்சனல் அணிக்கு மேலும் வலுசேர்ப்பார் எனக் கருதப்படுகிறது.

பிரிமியர் லீக் போட்டியின் புதிய பருவத்திற்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெறும் நட்புமுறை ஆட்டங்களில் ஆர்சனல் விளையாட்டாளர்களுடன் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்