Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"குப்பைகளால்" செய்யப்பட்ட கலைப்படைப்புகளுக்கான போட்டி...

வாசிப்புநேரம் -
குப்பைகள் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் கலைப்படைப்புகளுக்கான போட்டிக்கு 190 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

உடற்குறையுள்ளோரும் போட்டியில் பங்கெடுக்கின்றனர்.

தனி நபர்களும் அமைப்புகளும் நீடித்த நிலைத்தன்மைக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்ற ஊக்குவிப்பதைக் கலைப்படைப்புகள் இலக்காகக் கொண்டுள்ளன.

சிங்கப்பூர் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளையில் இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

24 வயது ஆலன் சாய்க்குப் (Allan Cai) பிறவியிலிருந்தே 'டவுன் சிண்ட்ரோம்' குறைபாடு உள்ளது.

இருந்தபோதிலும் தனது கனவை எட்டிப்பிடிக்க, அந்தக் குறைபாடு அவருக்கு ஒருபோதும் தடையாக இல்லை.

Art of Trash போட்டிக்கு ஆலன் அனுப்பிவைத்த கலைப்படைப்பு காட்சிக்கு வைக்கப்பட்டது.

உணவுக்கழிவு, அதிர்ச்சியூட்டும் அளவுக்கு இருப்பதை அவரது படைப்பு பிரதிபலித்தது.

கண்காட்சியில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான நாடாளுமன்ற மூத்த செயலாளர் பே யாம் கெங் (Baey Yam Keng) கலந்துகொண்டு பேசினார்.

இதுபோன்ற முயற்சிகள் மூலம் சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் முன்வைக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

இத்தகைய நடவடிக்கைகள், மக்களிடையே ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாக அவர் சொன்னார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்