Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"ART பரிசோதனைகளில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரும் அன்றாட பாதிப்பில் சேர்க்கப்படுவர்"

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் ART பரிசோதனைகளில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரும் அன்றாட பாதிப்பில் சேர்க்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வரையறுத்துள்ள இரண்டாம் நடைமுறையின்கீழ் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள வேளையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாரம் மட்டும் அன்றாடம் 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் நடைமுறையைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் ART பரிசோதனையை மேற்கொண்டு, மருத்துவர் ஆலோசனையை நாடுபவர்கள். அவர்களிடையே மிதமான அறிகுறிகள் தென்படுகின்றன.

"இருப்பினும் சிங்கப்பூரின் கிருமிப்பரவல் நிலைமையை மேலும் துல்லியமாகக் காட்டுவதற்கு ஏதுவாக, 
இரண்டாம் நடைமுறையைப் பின்பற்றுவோரும் அன்றாட எண்ணிக்கையில் சேர்க்கப்படுவர்," என்று சுகாதார அமைச்சர்  ஓங் யீ காங் (Ong Ye Kung) 

இனி அன்றாடம்  PCR பரிசோதனை மூலம் COVID-19 உறுதிசெய்யப்படுவோர் குறித்தும் இரண்டாம் நடைமுறையைப் பின்பற்றுவோர் குறித்தும் தனி விவரம் வெளியிடப்படும்.

இந்நிலையில், ஓமக்ரான் கிருமியால் ஏற்படும் பாதிப்பும் டெல்ட்டா கிருமியால் ஏற்படும் பாதிப்பும் இனி வேறுபடுத்தப்படமாட்டா என்று அமைச்சர் ஓங் கூறினார்.

தற்போதைய கிருமிப்பரவல் கட்டத்தில் ஓமக்ரான் கிருமியே அதிகம் பரவுவதை அவர் சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்