Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 அறிகுறிகளோடு வருவோருக்குக் கூடுதலாக ART முறைப் பரிசோதனை

கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தெளிவாகத் தென்படுவோரிடம், கூடுதலாக ART (antigen rapid testing)முறைப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 அறிகுறிகளோடு வருவோருக்குக் கூடுதலாக ART முறைப் பரிசோதனை

(படம்: Raffles Medical Group)

கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தெளிவாகத் தென்படுவோரிடம், கூடுதலாக ART (antigen rapid testing)முறைப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், சுவாசப் பிரச்சினை, சுவை, மணம் ஆகியவற்றை உணரமுடியாதது-ஆகிய அறிகுறிகள் தென்படுவோரிடம் தற்போது PCR பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.

இனி அவர்களிடம், ART முறைப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என்று, சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

புதிய நடைமுறை, மருந்தகங்கள், அவசர மருத்துவப் பிரிவுகள், பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் (Public Health Preparedness Clinics), வட்டாரப் பரிசோதனை நிலையங்கள் ஆகியவற்றுக்குச் செல்வோருக்குப் பொருந்தும்.

PCR பரிசோதனையோடு ஒப்பிடுகையில், ART முறைப் பரிசோதனை மூலம், விரைவான முடிவுகளைப் பெறமுடியும் என்று திரு. கான் சொன்னார்.

PCR பரிசோதனைகளின் முடிவு - 48 மணி நேரம் வரை

ART முறை பரிசோதனைகளின் முடிவு - சுமார் 30 நிமிடங்கள்

ART முறைச் சோதனை முடிவு, PCR பரிசோதனை அளவுக்குத் துல்லியமானது அல்ல. ஆனால், அதில் முடிவை விரைந்து பெறமுடியும்.

அந்த அம்சம் காரணமாக, சுகாதார அதிகாரிகளால் விரைந்து செயல்பட முடியும் என்று சுகாதார அமைச்சர் கான் குறிப்பிட்டார்.

ART முறை பரிசோதனைகளில் கிருமித்தொற்று இருப்பதாகத் தவறான முடிவுகள் காட்டினாலும் அதை PCR பரிசோதனைகள் வழி உறுதி செய்துகொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

COVID-19 அறிகுறிகளை வெளிப்படுத்துவோருக்கு ART, PCR பரிசோதனைகள் செய்வதற்கான செலவை, அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்