Skip to main content
கடற்படையில் கால்பதித்த சகோதரர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடற்படையில் கால்பதித்த சகோதரர்கள்

சிங்கப்பூர் ராணுவத்தின் 22 வார நிபுணத்துவப் பயிற்சியை(Specialist Cadet Course) தேசியச் சேவையாளர்கள் 1,189 பேர் இன்று நிறைவு செய்தனர். 

வாசிப்புநேரம் -
கடற்படையில் கால்பதித்த சகோதரர்கள்

3SG அருண் (இடது), 3SG வருண் (வலது). படம்: MINDEF

சிங்கப்பூர் ராணுவத்தின் 22 வார நிபுணத்துவப் பயிற்சியை(Specialist Cadet Course) தேசியச் சேவையாளர்கள் 1,189 பேர் இன்று நிறைவு செய்தனர்.

வெவ்வேறு பயிற்சி முகாம்களில் நடைபெற்ற உள்ளரங்கு அணிவகுப்பில் தேசியச் சேவையாளர்கள் தங்கள் துப்பாக்கி முனையில் பொருத்தப்படும் கத்தியைப் பெற்று கொண்டனர்.

சகோதர்களான 3SG சீதாராமன் அருண் பாலாஜியும் 3SG சீதாராமன் வருண் கார்த்திக்கும் அவர்களில் அடங்குவர்.

ஒரே பிரசவத்தில் பிறந்த மூவரில் இருவர் அந்தச் சகோதரர்கள்..

மூத்தவர் அக்கா. சகோதரர்கள் இருவருமே ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தனர்.

கடற்படைத் தொடர்பு நிபுணராக(Naval Communications Specialist ) அருணும் கடற்படை ஆயுத நிபுணராக (Naval Weapon Specialist) வருணும் சேவை ஆற்றவுள்ளனர்.

குடும்பத்தில் அவர்கள்தான் முதல்முறை தேசியச் சேவை புரிகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் பெற்றோர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர்.

நிபுணத்துவப் பயிற்சியாளர் பள்ளியில் (Specialist Cadet School) அவர்களுடைய பயணத்தையும் எதிர்கொண்ட சவால்களையும் 'செய்தி' கண்டறிந்து வந்தது.

தேசியச் சேவை சிங்கப்பூரின் மீதான உங்கள் பார்வையை எவ்வாறு மாற்றியுள்ளது?

சிங்கப்பூர் கடல்துறையைச் சார்ந்துள்ள நாடு என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் கடற்படையில் இருக்கும்போது தான் அதை முழுமையாகப் புரிந்துகொண்டேன். சிங்கப்பூர்க் கடற்படையின் பயிற்சிகள் என்னுடைய பார்வையை விரிவுபடுத்தியது. நீர்ப்பகுதிகள் நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியமாய் விளங்குகின்றன என்பதை உணர்ந்தேன்.

- வருண்

சிங்கப்பூரின் பெரும்பாலான வர்த்தகம் கடல்வழியே நடைபெறுகிறது. கடற்படையின் முக்கியத்துவத்தை, கடல்வழி வர்த்தகத்திற்கு அது எவ்வாறு பாதுகாப்பளித்து வருகிறது என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டேன்.

- அருண்

நிபுணத்துவப் பயிற்சியாளர் பள்ளியில் எதிர்நோக்கிய சவால்கள் என்னென்ன?

நீச்சல் தேர்வில் நாங்கள் அனைவருமே தேர்ச்சி பெற வேண்டும். அதில் ஓர் அங்கமாக 3 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க வேண்டும். எனக்கு உயரம் என்றால் அச்சம். எனது தம்பி வருண் அதனைச் சுலபமாகச் செய்து முடிந்துவிட்டான். அது எனக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது. ஆனால் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவால் எனது நடுக்கம் குறைந்தது. பயத்தைச் சமாளித்து நீச்சலில் தேர்ச்சி பெற்றேன்.

- அருண்

நிறைய தேர்வுகளைக் குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. புரியாதவற்றை நண்பர்களின் உதவியுடன் புரிந்துகொண்டேன். அவர்கள் அளித்த ஊக்கமும் ஆதரவும் பேருதவியாக இருந்தன.

- வருண்

நிபுணத்துவப் பயிற்சியின் உங்களின் குடும்பம் எவ்வாறு உறுதுணையாக இருந்தது?

எங்கள் குடும்பத்தில் நாங்கள்தான் முதன்முறை தேசிய சேவையைச் செய்கிறோம். எனவே பெற்றோர் மிகவும் ஆர்வமாக இருந்தனர். வீடும் முகாமும் தொலைவில் அமைந்துள்ளன.

இருப்பினும் முகாமிலிருந்து வீடு திரும்பும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அப்பா எங்களை அழைக்க வருவார். தவறாமல் அப்பா பயிற்சியில் நடக்கும் விவரங்களைக் கேட்டறிவார். தினமும் அப்பாவும் அம்மாவும் அழைத்து எங்களுடன் பேசுவார்கள். சிரமமான நேரங்களைக் கடக்க குடும்பத்தினரின் அரவணைப்பும் அன்பும் ஆதரவாக அமைந்தன.

- வருண்  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்