Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ASEAN கிண்ணக் காற்பந்துப் போட்டி: தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
ASEAN கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான குழு நிலையிலான ஆட்டத்தில் சிங்கப்பூர் இன்று மலேசியாவைச் சந்திக்கவிருக்கிறது.

அந்த ஆட்டம் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜாலில் (Bukit Jalil) தேசிய அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

அரையிறுதிக்குச் செல்லவேண்டும் என்ற வேட்கையில் சிங்கப்பூர் இருக்கிறது.

அதற்கு இன்றைய ஆட்டத்தை சிங்கப்பூர் தோல்வியின்றி முடிக்க வேண்டும்.

அந்த ஆட்டத்தில் வென்றால் அல்லது சமநிலை கண்டால் சிங்கப்பூர் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

⚽ இதுவரை நடந்த ஆட்டங்களில்?

டிசம்பர் 11ஆம் தேதி குழுவில் சிங்கப்பூர் முதல் ஆட்டத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது. அதில் சிங்கப்பூர் 2-1 என கம்போடியாவை வீழ்த்தியது.

டிசம்பர் 14ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் 3-0 என திமோர் லெஸ்ட்டேவை (Timor-Leste) வென்றது.

எனினும் ஆகக் கடைசியாக டிசம்பர் 17ஆம் தேதி நடப்பு வெற்றியாளர் தாய்லந்துக்கு எதிரான ஆட்டம் சிங்கப்பூருக்குச் சாதகமாக அமையவில்லை. அதில் சிங்கப்பூர் 2-4 எனத் தோல்வியுற்றது.

⚽ தற்போதைய நிலவரம்....

A குழுவில் தாய்லந்து 9 புள்ளிகளுடன் முன்னணியில் இருக்கிறது.

2ஆவது இடத்தில் 6 புள்ளிகளுடன் சிங்கப்பூர் உள்ளது.

3ஆவது 4ஆவது இடங்களில் 4 புள்ளிகள் சமமாகப் பெற்று மலேசியாவும் கம்போடியாவும் இருக்கின்றன.

குழுவில் முதல் 2 அணிகள் அரையிறுதிக்கு நேரடியாகத்
தகுதிபெறும் வாய்ப்பைப் பெறும்.

அதன் அடிப்படையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் சிங்கப்பூரின் புள்ளிகள் 9ஆக அதிகரிக்கும்.

சமநிலை கண்டால் 1 புள்ளி பெற்று 7ஆக உயரும்.
 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்