Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசியான் மின் கட்டமைப்பைப் பயனுள்ளதாக்க வட்டாரப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படவிருக்கும் சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -

ஆசியான் மின் கட்டமைப்பு வர்த்தக நிறுவனங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க சிங்கப்பூர் அதன் வட்டாரப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படவுள்ளது.

வர்த்தக, தொழில் அமைச்சு அதனை அறிவித்தது.

கட்டமைப்பு, விதிமுறைகள், சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.

எல்லை கடந்த எரிசக்திக் கட்டமைப்புகளில் முதலீடு செய்யும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் அமைச்சு சொன்னது.

ஆசியான் மின் கட்டமைப்பின் மூலம், உறுப்பு நாடுகளின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு ஒருங்கிணைக்கப்படுகிறது.

உறுப்பு  நாடுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், வர்த்தக, தொழில் அமைச்சு, அந்நாடுகளுடன் சில திட்டங்களில் இணைந்துள்ளது.

ஆசியான் மின் கட்டமைப்பை மேம்படுத்த அமைச்சு அமெரிக்காவுடன் இணைந்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்