ஆசியான் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற சிங்கப்பூர் அணிக்கு இறுதி வாய்ப்பு
ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேற சிங்கப்பூர் அணிக்கு இறுதி வாய்ப்பு...
அது இன்றிரவு வியட்நாம் அணியை மீண்டும் சந்திக்கவிருக்கிறது.
சிங்கப்பூர் ஏற்கனவே வியாழக்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் தோல்வியுற்றது.
அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும்.
அது சவாலாக இருந்தாலும் நடக்கமுடியாத காரியம் இல்லை என்று அணியினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
ஆட்டம் இன்றிரவு சிங்கப்பூர் நேரப்படி 9 மணிக்கு வியட்நாமில் நடைபெறும்.
வெற்றி பெறும் அணி தாய்லந்து அல்லது பிலிப்பீன்ஸை இறுதிச் சுற்றில் சந்திக்கும்.