Skip to main content
"திடல்தடக் குழு தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"திடல்தடக் குழு தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்" - சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம்

வாசிப்புநேரம் -
"திடல்தடக் குழு தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்" - சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம்
படம்: Team Singapore/Facebook
சிங்கப்பூர் திடல்தடக் குழு தன்னை மேம்படுத்திக்கொண்டு Team Singapore அணிக்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் கூறியுள்ளது.

அப்போதுதான் சிங்கப்பூர் இந்த வட்டாரத்தில் விளையாட்டில் முதல் மூன்று நிலைகளில் வர முடியும் என்றது மன்றம்.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் சிங்கப்பூர் 52 தங்கப்பதக்கங்களை வென்றது.

பதக்கப்பட்டியலில் சிங்கப்பூருக்கு ஐந்தாம் இடம்.

சிங்கப்பூர் கூடுதல் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால் திடல்தட வீரர்கள் அதற்குப் பங்களிக்கவேண்டும்.

சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைமைச் செயலாளர் மார்க் சே (Mark Chay) தாய்லந்தில் நடைபெற்ற நிறைவுக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

இம்முறை நீச்சல் அணி ஆக அதிகமான தங்கப்பதக்கங்களை வென்றது. மொத்தம் 19.

ஆனால் நீச்சல் குளத்துடன் திடல்தடத்திலும் நமது வீரர்கள் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று சே கூறினார்.

இந்த விளையாட்டுகளில் இளையர்கள் அதிக நம்பிக்கை கொடுத்துள்ளதாக மன்றம் சொன்னது.

விளையாட்டில் சிங்கப்பூருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை அது காட்டுவதாகவும் கூறப்பட்டது.

மொத்தம் 930 வீரர்களில் 60 விழுக்காட்டினர் முதல் முறை பங்கேற்றவர்கள்.

அவர்களது சராசரி வயது 21.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்