லாரிக்குள் ஒளிந்துகொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேற முயன்ற மலேசியர் கைது
வாசிப்புநேரம் -
(படம்: ICA)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற மலேசிய ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நேற்று (19 ஜூலை) நண்பகல் 12 மணிக்கு நடந்தது.
துவாஸ் சோதனைச்சாவடியில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியைப் பரிசோதித்த சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் அந்த ஆடவரைக் கண்டுபிடித்தனர்.
44 வயது மலேசியர் லாரியை ஓட்டி வந்தார்.
அதனுள் முறையான பயண ஆவணங்கள் இன்றி 32 வயது மலேசியர் ஒருவர் ஒளிந்திருந்தார்.
அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைவதையோ சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறுவதையோ சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கடுமையாகக் கருதுகிறது.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழையும் குற்றத்துக்குக் கூடியபட்சம் 6 மாதச் சிறையும் குறைந்தபட்சம் 3 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறினால் அதிகபட்சம் 1,000 வெள்ளி அபராதம், 6 மாதம் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
தடை விதிக்கப்பட்ட குடியேறிகளை சிங்கப்பூரில் இருந்து வெளியே கொண்டுசெல்லும் குற்றத்தில் ஈடுபட்டால் 2 முதல் 5 ஆண்டு வரை சிறையும் குறைந்தபட்சம் 3 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
அதற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.