Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மறைந்து வரும் பாரம்பரியத் தொழில்கள் - இசைவட்டு, திரைப்பட வட்டு விற்பனை

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இசைவட்டு, திரைப்பட வட்டு ஆகியவற்றை விற்கும் கடைகள் ஒரு காலத்தில் பரவலாகக் காணப்பட்டன. 

வாசிப்புநேரம் -

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இசைவட்டு, திரைப்பட வட்டு ஆகியவற்றை விற்கும் கடைகள் ஒரு காலத்தில் பரவலாகக் காணப்பட்டன.

1990களில் சுமார் 45 கடைகள் அந்த வட்டாரத்தில் செயல்பட்டு வந்தன.

ஒலிப்பேழை(Cassette tape), இசைவட்டு, VCD திரைப்பட வட்டு, DVD திரைப்பட வட்டு, VHS Tape, Recorder ஆகியவற்றை நாடி வாடிக்கையாளர்கள் அங்கு சென்றனர்.

10 வெள்ளியிலிருந்து 35 வெள்ளி வரை அவை விற்கப்பட்டன. விலை அதிகமாக இருந்தாலும் அப்போது அவற்றின் விற்பனை அமோகமாக இருந்தது.

தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இணையத்தின் அசுர வளர்ச்சியால் திரைப்படங்களும் பாடல்களும் அங்கு குவிந்து கிடக்கின்றன.

அதனால் இசைவட்டு, திரைப்பட வட்டு ஆகியவற்றை விற்கும் கடைகள் பொலிவிழந்துள்ளன. தற்போது இரண்டு கடைகள் மட்டுமே லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இணையத்தை அதிகம் பயன்படுத்தத் தெரியாதவர்களும் மூத்தோரும் இன்னும் இசைவட்டு, திரைப்பட வட்டு ஆகியவற்றை நாடி வருவதாக அக்கடைகள் தெரிவித்தன.

குறிப்பாக பக்திப் பாடல்கள் தான் தற்போது அதிகம் விற்கப்படுவதாக அவை கூறுகின்றன.

அருகி வரும் வியாபாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள சில மாற்றங்களையும் அவை செய்துள்ளன.

அதனைப் பற்றிய மேல் விவரங்களை 'செய்தி' கண்டறிந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்